சமூக ஒற்றுமைக்கான வழிமுறைகள்
அக்கம் பக்கம் உண(ர்)வை பகிர்ந்திடு
ஆற்றல் மிகுந்து ஆணவம் அழித்து உயர்ந்திடு
இன்பம் கொண்டு இணைந்திடு
ஈசன் ஒன்றென உணர்ந்திடு
உடன்பிறப்பாய் அனைவரையும் எண்ணிடு
ஊன்றுகோலாய் எளிவருக்கு உதவிடு
எறும்பிடம் குழு வாழ கற்றிடு
ஏலக்காய் போல மணந்திடு
ஐம்பொறிகளில் நல்வினை செய்திடு
ஒளியாய் அனைவருக்கும் உதவிடு
ஓடைபோல் ஓயாமல் உழைத்திடு
ஔகம் ஓற்றுமை கொண்டிடு
அஃதே வாழ்வென வாழ்ந்திடு
No comments:
Post a Comment